Sunday, August 16, 2015

கடன்




'டேய் மச்சி.. தயவு செஞ்சு நான் சொல்றத நம்பு. இந்த ஒரு வாரமா எனக்கு கெடைக்கற அப்ரிசியசன்ஸ் எல்லாமே நான் பண்ணது கெடயாது டா.' என்று சீரியஸ்ஆ கார்த்திக் மோகனிடம் சொல்லிகொண்டிருந்தான்.
'ஹ்ம்ம். அப்பறம்? இவருக்கு வேற யாரு வந்து ஹெல்ப் பண்றாங்க? எதாச்சும் பேய் வந்து ப்ரோக்ராம் எழுதுதா? இருந்தாலும் இருக்கும்.. இப்படி நைட் ஷிப்ட்ல, தனியா வொர்க் பண்ணா அப்படிதான்.' என்றான் சிரித்தபடி.
மோகன், கார்த்திக்.. இரண்டு பெரும் ஒரு கல்லூரியில் படித்து, ஒரே கம்பெனில  வொர்க் பண்றாங்க.மோகன், டைடல் பார்க்கில் உள்ள ஒரு பிரிவில் வேலை. கடந்த வருடம் வரை அதே கம்பனில், பெங்களூரில் அமைந்துள்ள  வேறு  பிரிவில் வேலை பார்த்துகொண்டிருந்தான் கார்த்திக். இந்த 6 மாத காலமாய் இருவரும் ஒரே பிரிவில், டைடல் பார்க்கில் , வேறு வேறு ப்ராஜெக்ட்ல் வேலை செய்கிறார்கள்.   இருவரில் மோகன் சுமாரான ப்ரோக்ராம் பண்ன கூடியவன். கார்த்திக் .. கொஞ்சம் புத்திசாலி தான்.


மோகன் வெந்தும் வேகாமலும் இருந்த தோசையை சாப்பிட்டபடி.
 'டேய்..  நைட் ஷிபிட் நான் என்னமோ கேட்டு வாங்குன மாதிரி சொல்ற. நானே செம காண்டுல இருக்கேன் ஆறு மாசமா.  நானே ஜாவால எதுவுமே தெரியாதவன். ஏதோ கொஞ்ச நஞ்சம் தெரிஞ்சத வச்சு, ஒரு டிபெக்ட்ஆ பிக்ஸ் பண்ன தலைகீழா நின்னு தண்ணி குடிக்கணும். வேற ப்ராஜெக்ட்ல இருந்தாலும்,  ஏதோ நீ இருந்ததல அப்படியே சமாளிக்க முடுஞ்சுது. நீயும் மெடிக்கல் லீவ்ல போயிட்டே.  ஆனா, கடந்த ஒரு வாரத்துல எல்லா இஸ்யுசும் காத்து மாதிரி ரிசால்வ் ஆகுதே எப்படி? நானும் சின்ன சின்ன சேஞ்ச் தான்னு கண்டுக்காம தான் இருந்தேன். ஆனா.. இப்ப இந்த ரெண்டு நாளா மேனேஜர் கொடுக்கற டிபெக்ட், ரொம்ப கிரிடிகல் அண்ட் பிக்ஸ் பண்ன என்னால கண்டிப்பா முடியாது. அதுவும் நேத்து ஒன்னு பிக்ஸ் ஆகிருக்கு. கோடு சேஞ்ச்ம் ஆகிருக்கு. அதுக்கு தான் உன்ன தூங்காம இருக்க சொன்னேன். இன்னிக்கு இதை பிக்ஸ் பண்ணியே ஆகவேண்டும். ஏதோ ரெண்டு வாரமா எப்படியோ பிக்ஸ் ஆகிடுச்சு. ஆனா, இன்னிக்கு கொஞ்சம் பயமா இருக்கு டா.  ஆரம்பித்திலேயே சொன்னா.. நீ நம்ப மாட்ட. அதான் சொல்லல. நீ தான் ஹெல்ப் பண்ணனும் டா. இப்ப என்ன பண்ணலாம்? ' என்று மோகனை பார்த்து கேட்டான்.
'சரி.. நீ கேக்கற கேள்வி எல்லாம் ஞாயம் தான். இது யாரோ உன்ன பயமுறுத்த பண்ற வேலை இது. உன் பாஸ்வோர்ட் உன்ன தவிர வேற யாருக்காச்சும் தெரியுமா? இல்ல ஆன்சைட்ல இருக்கறவங்க யாராச்சும் ரிமோட்ஆ வொர்க் பன்றன்களோ?' என்று தன்னுடைய சிபிஐ வேலையை ஆரம்பித்தான் கார்த்திக்.

'டேய். என்னோட பாஸ்வோர்ட் உனக்கு தெரியும். வேற யாருக்கும் தெரியாது. கண்டிப்பா ஆன்சைட்ல இருக்கறவங்க இத பண்ணிருக்க மாட்டாங்க. எப்படா பொழுது போகும், எப்படா டாஸ்க் எல்லாம் ஆப்ஷோர்கு அனுப்பலாம்னு வெயிட் பண்ற குரூப். இது ஏதோ அமானுஷ்ய வேலை மாதிரி தெரியுதுடா.' என்று கொஞ்சம் பயந்தபடி கூறினான் மோகன்.

   'இன்னிக்குதான் நானும் உன்கூட இருக்கேன்ல. ஹாலுக்கு வர்றதுக்கு முன்னாடி சிஸ்டம் லாக் பண்ணிட்டு தானே வந்தோம். பாக்கலாம். ப்ரோக்ராம் யார் இப்ப பிக்ஸ்  பண்றாங்கன்னு  பாத்துடலாம்.' என்றவாறு, சாப்பிட்ட தட்டை எடுத்துவிட்டு, கை கழுவ சென்றான் கார்த்திக்.
இருவரும் ரூமை நோக்கி போக, அங்கே, மோகனின் லாப்டாப் தானாக உயிர்ப்பித்து, அதில் ஜாவா கோடும் அடிக்கபட்டு இருந்தது. கார்த்திக் வேகமாக சென்று மொனிடர்ஐ பார்க்க, கிரிடிகல் டிபேக்ட் பிக்ஸ் ஆகி இருந்தது.  கார்த்திக் அதை சரி பார்த்தான்.
'டேய். எச்செல்லேன்ட் டா. சூப்பர்அ ரிசல்வ் ஆகிருக்கு. நீ சொன்ன மாதிரி ஏதோ அமானுஷ்யம் தான்னு நெனைக்கறேன். அப்படியே இருந்தாலும், உனக்கு நல்லது தானே நடக்குது. விட்டுவிடு. இது எவ்வளவு தூரம் போகுதுன்னு பாக்கலாம்.' என்றான் கார்த்திக்.
மோகன்,'இல்லடா. இதுல இன்னொரு பிரச்னையும் இருக்கு.' என்றான்.
'என்னடா சொல்ற?' என்றான் கார்த்திக்.
'ஆமா. கடந்த ரெண்டு வாரமா, இந்த ஹெல்ப் கெடைக்கறதுக்கு முன்னாடி, டே டைம்ல ஆபீஸ் போய், நான் நம்ம டீம்ல இருக்கற 3 பேர் கிட்ட ஹெல்ப் கேட்டேன். ராஜி, ஸ்ரீகாந்த், பார்த்தி. இவங்க மூணு பேருமே இப்ப அச்சிடேன்ட் ஆகி வீட்டுல இருக்காங்க.'

'சரி. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.?' என்றான் கார்த்திக்.

' அதுக்கு காரணம் இருக்கு. முதல் தடவை, ஒரு  வாரம், நான் ராஜி கிட்ட ஹெல்ப் கேட்டப்போ, எவனிங் அவங்க கெளம்பற நேரம். அப்போ தான் நா ஆபீஸ்கு வந்து ஒரு மணி நேரம் இருக்கும். அவங்க எனக்கு அந்த ப்ரொப்லெம் எப்படி பண்ணனும்னு சொல்லி கொடுத்தாங்க. அப்போ நீ லீவ் போட்டுட்டு ஊருக்கு கெளம்பிட்டு இருந்த. கரெக்ட் அஹ?' என்றான் மோகன்.

கார்த்திக்,'ஆமாம். ஞாபகம் இருக்கு'

'ஹ்ம்ம். எனக்கு அதை ரிசல்வ் பண்ணிட்டு, அவங்க கெளம்பி, OMR ரோடு போனவுடனே, அச்சிடேன்ட் ஆகிருச்சு அவங்களுக்கு.'

'சரி. அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே?'

'எனக்கு அப்போ ஒன்னும் தோணல. அவங்க சின்ன அடியோட தப்பிசுட்டங்க. அப்பறமா, ரெண்டு நாள் கழிச்சு ஒரு ப்ரொப்லெம்காக ஸ்ரீகாந்த் கிட்ட டவுட் கேட்டேன். அப்போ லஞ்ச் டைம். அவரு அவசரமா கெளம்பிட்டு இருந்தார். ஆனாலும், எனக்கு அதை ரிசல்வ் பண்ணிகொடுதுட்டு தான் போனாரு. ஆனா, அதே எடத்துல, அவரும் அச்சிடேன்ட் ஆகிட்டாரு.'

'டேய். நீ பயத்துல, ஏதேதோ போட்டு கற்பனை பண்ணிட்டு இருக்காத. டைடல் சிக்னல் கொஞ்சம் டிராபிக் ஜாஸ்தி. ராஜிக்கு ஒழுங்கா சைக்கிள்அஹ ஓட்ட தெரியாது. அது ஸ்கூட்டில போய் விழுந்திருக்கு. அதுவும் மொக்க அடிதான். ஸ்ரீகாந்த், அவன் எப்போமே வேகமா பைக் ஒட்டுவான். அதுவும் புது பைக்வேற. அதுவும் அவன் பசில லஞ்ச்கு போறப்போ அவன ஸ்டாப் பண்ணி டவுட் கேட்டுருக்க. டைம் ஆனதால, வேகமா போயிருப்பான். சோ, அதுவும் எதச்சைய நடந்தது தான்.'

'அப்போ. பார்த்தி? அவன் கிட்ட வண்டியே கெடயாது. அவனுக்கும் ஏன் அச்சிடேன்ட். அதே எடத்துல நடக்கணும். அவன்கிட்டயும் கடைசியா பேசினது, ஹெல்ப் கேட்டது நான் தான். அவனுக்கும் ஏன் அதே மாதிரி அச்சிடேன்ட் ஆகனும்? இப்ப பாரு, டீம்ல முக்கால் வாசி பேர் ஹோச்பிடல்ல. இதுக்கு எல்லாம் மேல, சில சமயங்கள்ல, என்னால திடீர்நு ஒரு விதமான வித்தியாசமா உணர்றேன்.  எனக்கென்னமோ, இது ஆவி சம்பந்தபட்டதா இருக்கலாம்னு தோணுது. ' என்றான் மோகன் பயந்துகொண்டே.

யோசனையில் விழுந்தான் கார்த்திக். கார்த்திக்கு பேய், பூதம் எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்த போதிலும், நடக்கும் விசயங்களும் சாதரணமாக தோன்றவில்லை.
'டேய் மோகன். உனக்கு ரகு ஞாபகம் இருக்கா?'
'ஆமா. கரெக்ட் டா. அவன் கிட்ட கேட்டு பார்த்த எதாவது விஷயம் தெரியலாம். அவன் நம்பர் இருக்கா?' என்றான் மோகன்.

'இருக்கு. அவன் தான் எப்ப பாரு இந்த மாதிரி அமானுஷ்ய விசயங்களை பத்தி அடிக்கடி பேஸ்புக்ல அப்டேட் பண்ணுவனே? அவன்கிட்ட கேட்ட எதாச்சும் தெரியலாம்.' என்று சொல்லிக்கொண்டே தனது போன்ஐ எடுத்து, ரகுவிற்கு கால் செய்தான்.
"தி நம்பர் யு ஹவெ.." என்று பதில் வர, கார்த்திக், 'நம்பர் நாட் இன் யூஸ் டா' என்றான்.
'ஒரு நிமிஷம். பேஸ்புக்ல பிங்க் பண்ணி பாக்கறேன்.' என்றவன், உடனடியாக ஒரு மெசேஜ்ஐ தட்டி விட்டான்.  அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ரகு நம்பர் கிடைக்க, போன் செய்தான் கார்த்திக்.
'ஹலோ'
'ஹே ரகு, எப்படி இருக்கடா?'
'ஐ'ம் பைன். சொல்லுடா. என்ன மேட்டர்?'
'ஒன்னும் இல்ல. மோகன் இருக்கான்ல? அவனுக்கு ஒரு ப்ரொப்லெம். இப்போ எங்க இருக்க?'
.........
'ஓகே டா. இப்போ டைம் ஆச்சு. பரவா இல்லையா?'
.......
'சரி. ஓகே. அப்போ டைரக்ட்அஹ நாங்க அங்கேயே வந்துடறோம். ஓகே சி யு.' போன்ஐ கட் செய்தவன், 'மோகன்., ரகு ரூம்ல தான் இருக்கானாம். அவன்கிட்ட பைக் இல்லையாம். சர்வீஸ்கு விட்ருக்கனாம். வரசொன்னான் இப்போ. போலாமா?'
'டேய். நைட்ஷிபிட் வேறடா. ஆன்சைட்ல கேக்கறேன். எதுவும் ப்ரொப்லெம் இல்லைனா, போலாம்டா.'
'சரி. நீ கேட்டுட்டு சொல்லு, நான் வெயிட் பண்றேன்.' என்ற கார்த்திக், சேர்ரில் உட்கார்ந்தான்.
பேசி முடித்த பின், சோர்வாக திரும்பினான் மோகன்.
கார்த்திக்,' என்ன.. அஸ் யூஸ்வல், முடியாதா?'
ஆமாம் என தலையாட்டினான் மோகன்.
'சரி விடு. நா ரகு கிட்ட சொல்லிடறேன். நாளைக்கு சனிகிழமை தான.  நம்ம நாளைக்கு போய்க்கலாம். அவனும் ப்ரீஐ இருப்பான்.'

ரகுவை சந்தித்து, நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் மோகன். மிக கவனமாக கேட்டவன், 'மோகன். இது கண்டிப்பா ஆவி சம்பந்த பட்ட விஷயம் தான். நைட், கார்த்தி கொஞ்சம் போன்ல சொன்னான்.  எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார். அவர் பேய்களை பத்தி நிறைய ரேசீர்ச் பண்ணிட்டு இருக்கார். நா அவர்கிட்ட நேத்து நைட் பேசிட்டு, அப்பொஇண்ட்மெண்ட் வாங்கிருக்கேன். எவனிங் போலாமா?' என்றான் ரகு.

'என்னடா ரகு.. இவங்களைய பார்க்க வந்தோம்?' - மோகன்.
'ஆமா. இவங்க தான் நா சொன்ன 'தெரிஞ்சவர்'.   -ரகு
 'உனக்கு தெரிஞ்சவர்னு சொன்னே, இங்கவந்து பார்த்தா, ஒரு பொண்ணு. இவங்களா நமக்கு?' என்று இழுத்தான் மோகன்.
'ஆமா டா. இவங்க பேர் சாருமதி டேவிட். சொந்த ஊரு மறையூர், கேரளா . ஆனா, முனார், தமிழ்நாடு பார்டர்ன்றதால, இவங்க தமிழும் பேசுவாங்க.  இவங்க ஹோஸ்ட் ரிசர்ச்ல நெறைய புக்ஸ், ப்ளொக்ஸ் எல்லாம் எழுதிருக்காங்க. அது மட்டும் இல்ல. இவங்க பேய் இருக்குன்றத முழுசா நம்பறாங்க. இவங்க நெறைய  கேசெஸ் சால்வ் பண்ணிருக்காங்க.' -ரகு.
ரகு சாருமதியை பற்றி சொல்லிகொண்டிருக்க,
'ஆர் யு ரகு? உங்களை மேடம் வரசொல்றாங்க.' என்றான் அங்கு இருந்த ஒரு உதவியாளர்.

உள்ளே சென்ற மூவரும், ஒரு பெரிய ரூம் வரவேற்றது. சுற்றிலும் மிக அமைதியான சூழ்நிலை நிலவ,  நாற்பது வயதுமிக்க ஒரு பெண் அமர்ந்திருக்க, இவர்களை பார்த்து, எதிரில் இருந்த இருக்கையில் அமருமாறு கூறினாள். 'சொல்லுங்க ரகு. இவங்க தான் நீங்க சொன்ன பிரண்ட்ஸ் அஹ?' என்றவாறு மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டாள். கார்த்திக் அந்த அறையை நோட்டமிட்டான். எந்த விதமான கடவுள்களின் படமோ, மத சம்பந்தமான சம்பரதயங்கலோ, எதுவும் இல்லாமல், துடைத்து வைத்த மாதிரி இருந்தது அந்த அறை. ஒரு மெலிதான இசை அந்த அறையில் இருந்த ஸ்பீக்கர்ரில் கசிந்து கொண்டிருந்தது. இதற்கு இடையில், மோகன் நடந்த விசயங்களை விலாவரியாக விவரிதுக்கொண்டிருந்தான்.
கவனமாக கேட்ட சாருமதி, "நீங்க சொல்லுவதை எல்லாம் வைத்தும், எனது அனுபவத்தையும் வைத்தும் பார்க்கும்பொழுது, இது பாவலோக ஆவிகளின் வேலையாக இருக்கலாம். கொஞ்சம் டீடைல்அஹ சொல்றேன்.
என்னோட அனுபவத்தையும், ஆராச்சியையும் வைத்து, ஆவிகளை மூன்று விதமாக பிரிக்கலாம். உலகத்துல இருக்கிற எல்லோருமே மரணத்துக்கு அப்புறம் ஆவிகள் உலகத்துக்கு தான் போறாங்க. அந்த ஆவிகள் உலகத்துல பாவலோக ஆவிகள், மத்தியலோக ஆவிகள், புண்ணியலோக ஆவிகள்னு மூணு விதமான பிரிவுகள் இருக்கு. உயிரோட இருக்கும்போது மனிதன் எப்படி வாழ்கிறானோ அதுக்குத் தகுந்தபடி, அவர்களுடைய மரணத்துக்கு அப்புறம் இந்த மூணு உலகத்துல ஓர் உலகத்துக்குப் போவாங்க. மத்தியலோக ஆவிகள் நல்லதும் பண்ணாது, கெட்டதும் பண்ணாது. புண்ணியலோக ஆவிகள் மனிதர்களோட சகஜமா பேசவும் பழகவும் செய்யும். நம்மளைத் தொந்தரவு பண்றதெல் லாமே பாவலோக ஆவிகள் மட்டும்தான். தவிர, நம்ம நாட்டுல இருக்கிற மாதிரி ஆவிகள் உலகத்திலேயும் சட்ட திட்டங்கள் இருக்கு. இதெல்லாம் ஆவிகள் உலகத்துல நான் பயணப்பட்டு தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள். புண்ணிய லோகத்துல இருக்கிற ஆவிகள் மனிதனுக்கு ஏதாவது உதவிகள் பண்ணிக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படும். 'கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும் நான் செத்திருப் பேன்டா’னு யாராவது சொல்லியிருப்பாங்க. இதெல்லாம் புண்ணியலோக ஆவிகளோட செயல்தான். பாவலோக ஆவிகள் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. நீங்களே பலவிதமாக, சினிமா, கதைகள்ல பாத்திருப்பீங்க, படிச்சிருப்பீங்க.  இப்படி சக மனிதனுக்கு உதவணும்னு நினைக்கிற புண்ணியலோக ஆவிகளை வெச்சு என்கிட்ட வர்றவங்களோட பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறேன். தவிர, எல்லா ஆவிகள்கிட்டேயும் நல்லா பேசி, பழகி என்னோட ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்திக் குவேன். ஆனா உங்க விசயத்தில ஒரு சில விஷயங்கள் நெருடல இருக்கு. உங்களுக்கு உதவி செயுதுனும் சொல்றீங்க, அதே சமயம் உங்க குரூப்ல இருக்கற சில பேருக்கு அச்சிடென்ட்அகிருக்குனும் சொல்றீங்க. அதுவும் இல்லாம, உங்க கிட்ட சில கேள்விகள் கேக்கணும்.
உங்களுக்கு தெரிஞ்சவங்க, பழகினவங்க யாரவது சமீப காலமாகவோ, யாரவது இறந்திருக்கங்கள? துர்மரணம் எதாவது?" என்ற கேள்வியுடன் தனது பேச்சை நிறுத்தினாள் சாருமதி.
இது வரை அமைதியாய் இருந்த மோகனின் கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தது.
கார்த்திக், 'ஆமாங்க. ரெண்டு வருஷமா, மோகனுடன், என்னுடன் மிகவும் க்ளோஸ்அஹ இருந்த எங்க ப்ரண்ட், பிரியா. ரொம்ப நல்ல ப்ரில்லியன்ட்.  ஒருவருடத்திற்கு முன்னால கடன் தொல்ல தாங்க முடியாம சூசைட் பண்ணி இறந்துட்டாங்க.' அவங்க எனக்கும் மோகனுக்கும் நெருக்கமான தோழி.' என்றான் கார்த்திக்.
'ஒருவேளை, அவங்க ஆவி..' என்று இழுத்தாள் மோகனை பார்த்தபடி.
 'இருக்காதுங்க சாருமதி. அவ ரொம்ப நல்ல பொண்ணு, அமைதியானவ. எந்த பிரச்சனையா இருந்தாலும் தனக்குள்ள வச்சுகிரவ. தன்னல மட்டுமே தன் ப்ராபலாத சால்வ் பண்ண முடியும்னு நம்பற பொண்ணு. அவ ஏன் இப்படி பண்ணனும்? இருக்காதுங்க.'
சாருமதி, 'நா அவங்களை தப்பனவங்கனுநும் சொல்லல, உங்க பிரண்ட்ஸ்அஹ அச்சிடென்ட் பண்ண காரணமா இருக்கான்ங்கநும் சொல்லல.  அட் தி சேம்டைம், உங்களுக்கு உதவியா இருந்திருக்கு. அது ஏன் பிரியா வா இருக்க கூடாது?'
மோகன் அமைதியானான்.
' சரி. அவங்க கூட பேச முடியுமான்னு பாக்கறேன். நீங்க அவங்க டீடைல் கொடுத்துட்டு, வெளில வெயிட் பண்ணுங்க. நா கூப்றேன்.' என்றாள் சாருமதி.
ஒரு மணிநேர காத்திருப்புக்கு பிறகு, சாருமதி மூவரையும் உள்ளே அழைத்தாள்.
'ஐ'ம் சாரி மோகன். நா எவ்வளவு முயற்சி செய்தும், அவங்க கூட பேச முடியவில்லை.  ஒருவேளை அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாமல் கூட இருக்கலாம். பட், பேசி பாக்கறது தப்பில்லை.'
'வேற வழியே இல்ல சாருமதி?' - மோகன்
'ம். அஸ் ஐ செட், இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. உங்கள் அறையில் இருந்து தான் முயற்சி செய்ய வேண்டும்.  இந்த ஸ்படிக மாலையை போட்டுக்கோங்க. கூடவே இந்த முக கண்ணாடியையும். நீங்கள் அமரும் இடத்திற்கு அருகில் வச்சுக்கோங்க.  ஒரு சின்ன விஷயம். இந்த மாலையும், கண்ணாடியும் பரிசுத்தமான ஒன்று. கொஞ்சம் அசைவம்  சாப்படகூடாது. உங்களுக்கு உதவி செய்யறது ஆவிதானணு கன்பர்ம் பண்ணனும். ஒருவேளை, அது பிரியாவாக இருக்கும் பட்சத்தில்,  பிரியா எப்போ உங்க கூட இருப்பதை உணர்கிறீர்களோ, அப்போ, கொஞ்சமும் பயப்படாமல், உங்க மனசை ஒருநிலை படுத்தி, அவங்களை மட்டும் நினைவில் வைங்க. நான் கொடுத்த மாலையும் முக கண்ணாடியும் அதற்கு உதவியாக இருக்கும். அவங்க பேச விருப்பபட்டு, அதே மீடியம், அதாவது, உங்களுடைய லேப்டாப் மூலமா  பேசினா, உங்க கேள்விக்கு பதில் கிடைக்கலாம்.  அதுக்கு பிறகு, அந்த ஆவியை நம்ம கட்டுபடுத்த வேண்டும். இது கொஞ்சம் கவனமா செய்யணும். கண்டிப்பாக நானும் உங்களுடன் இருப்பேன்.  அவங்க உங்க கூட பேசும் பொழுது, அவர்களுக்கு பிடிக்காத ஒன்றையோ, விருப்ப படாத ஒன்றையோ, கேட்க வேண்ட. ஒருவேளை அது ப்ரியாவின் ஆவியாக இல்லாத பட்சத்தில், மேற்கொண்டு பேச முற்படும் பொழுது, எதாவது அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு.
நாளை கழித்து மறுநாள் இதை செய்வோம்.

இரண்டு நாட்களும் மோகனுக்கு ப்ரியாவின் நினைவுகள், ப்ரியாவை சுற்றியே இருந்தது. திங்கள் இரவு, மோகன் எப்பொழுதும் போல ரூமில் அமர்ந்து  தனியாக வேலை செய்து கொண்டிருக்க, சருமதியும், அவரது உதவியாளரும், கார்த்திக்கும்  ஹாலில் இருந்தனர். மோகன் மனதில் ப்ரியவவாக இருக்குமோ என்று எண்ணினாலும், அவளாக இருக்க கூடாது என்றும் எண்ணம் தோன்றியது. அவளின் ஆத்மா சந்தியடைந்திருக்க வேண்டுமென்றே விரும்பினான்.  எவ்வளவு துணிச்சலான பொண்ணு. சிறுவயதில் அப்பாவை இழந்தாலும், அவர்களது பரம்பரை சொத்து நிறைய இருக்க, அவளால் சுலபமாக படிக்க முடிந்தது. படித்து முடிக்கும் போதே அம்மாவும் போய்விட, ஒரே உறவாக உடன் பிறந்தவன், இருந்தவன், ஆனந்த். ட்வின் பிரதர்கு கான்சர்ன்றப்போ, எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா?  கான்சரில் பதிக்கப்பட்ட அவனது தம்பியை காப்பாற்ற, எவ்வளவு போராடினாள்? ஆனந்த் படிக்கவில்லை. அம்மா போன பின்பு, +2 வரையே படித்திருந்த ஆனந்த், பரம்பரை சொத்தை காப்பாற்ற போய்விட்டான், . கான்சர் கன்பர்ம் ஆனதில் இருந்து, ஆனந்த் யாரிடத்திலும் பேசுவதே இல்லை. அதுவும், கடைசி கட்டத்திலே தெரியவந்ததால், ரூமை விட்டு வரவே மாட்டான். இவ்வளவு கஷ்டத்திலும்,  எந்த ஒரு கஷ்டத்தையும் ஒரு நாள் கூட யாரிடத்திலும் சொல்லிகேட்டதில்லை. எப்போதும் சிரிச்ச முகமாய் இருப்பாள். வாழ்ந்து கெட்ட குடும்பம். கௌரவம், அது இதுனு,  இப்படி எதையும் வெளியில் சொள்ளததாலே, தெரியாமல் போனது அவளது பிரச்சனைகள். அந்த இழப்பிற்கு முந்தைய நாள் நன்றாகவே நினைவிருந்தது.


'என்னம்மா பிரியா, வாங்குன குடுக்கிற ஐடியா இருக்கிறதா, இல்லையா. வாங்கின கடனுக்கு, ஒன்னு பணத்தை பேங்க்ல கட்டு. இல்லையா, சொத்து எல்லாத்தையும் வித்து கட்டுங்க. போதுமான டைம் கொடுத்தாச்சு. இதுக்கும் மேல என்னால முடியாது. பாங்க்ல லோன் வாங்கி தர்றது மட்டும் என் வேல இல்ல. உங்களமாதிரி ஏமாத்துற ஆளுக கிட்ட இருந்து, பணம் திரும்ப வாங்கறதும் என் வேலைதான்.  என்ன பண்றது. உங்க அண்ணன், நல்ல இருந்திருந்தா, அவன் சட்டைய பிடிச்சு கேக்கலாம்., அவன் ஆயிசு முடுஞ்சது, அவனும் போய்ட்டான். பரவாஇல்ல. வுடு. சொத்து இருக்கு, பத்தலையா நீயும் அழகாதான் இருக்க.  @#$%' ஏகத்துக்கும் அவன் பேச, மிகுந்த அவமானம் ஆகிவிட்டது. நானும் அப்போது தான் அங்கு வந்து சேர, கோவத்தில் அவனிடத்தில் ஏகத்திற்கும் பேச, அவன் ஏகமாக பேச ஆரம்பித்தான். எனது கோபம் தலைக்கு ஏறி, ராகேஷ்ஐ ஓங்கி அறைந்து விட்டேன். பெரிய கைகலப்பாக, போலீஸ் வந்தது. ஒரு வழியாக போலீஸ் இடம் விளக்கி, ராகேஷ் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தோம்.  போலீஸ்ம் கட்ட பஞ்சாயத்து பண்ணியது போல, இரண்டு மாதம் காலஅவகாசம் வாங்கி தந்தார்கள். அப்பொழுது கார்த்திக் பெங்களூரில் இருந்ததால், இதை பற்றி போனில் அவனிடம் பேசினேன். அவனும் நானும் பிரியாவிற்கு உதவி செய்வதாக முடிவு செய்து, நாங்களும் கடன் வாங்க முடிவு செய்தோம். கார்த்திக் ஊரில் இருப்பதால், அவன் வந்தவுடன் பணத்தை திரட்டி, கடனை முடிப்பதை இருந்தோம்.  அன்று இரவு, ப்ரியாவை தனியாக விட்டது என்னுடைய தவறு தான். 12 மணி வரைக்கும் மெசேஜ் அனுப்பி கொண்டு தான் இருந்தாள். நானும் தூங்கி விட்டாள் என விட்டு விட,  எனக்கும், போலீஸ்கும் ஈ-மெயில் அனுப்பிவிட்டு, கையை அறுத்து கொண்டாள். அடுத்தநாள் அவளை ரத்த வெள்ளத்தில்,லேப்டாப்உடன் தான் பார்த்தேன்.  சரியாக மணிக்கட்டில் இருக்கும் நாடி நரம்பில் அறுபட்டு, ரத்தம் வெளியேறி இறந்திருந்தாள்.

இப்போது நினைத்தாலும் மோகனுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. திடீரென, அவனை சுற்றிலும் ஒரு வித குளிர்ச்சியை உணர்ந்தான். கொஞ்சம். இல்லை, நிறையவே பயப்பட, சாருமதி சொன்னது ஞாபகத்தில் வந்தது. பயத்தை கொஞ்சம் தைரியமாக மாற்ற முயற்சி செய்தான். மனதை ஒருநிலை படுத்த முயற்சி செய்தான், அவனது சிஸ்டம் ஆட்டோமாடிக்அஹ அவனது சாப்ட்வேர்  ஓபன் ஆக, அதில் தானாக டைப் ஆக ஆரம்பித்தது.
 மெலிதான குரலில், நடுங்கியபடி, 'பிரியா' என்றான். மோகனுக்கு வேர்க்க ஆரம்பித்திருந்தது. ஆனால், சாப்ட்வேர்ரில் டைப் ஆவது நிற்க வில்லை.
மீண்டும் சற்று அழுத்தமாய், 'பிரியா' என்றான். டைப் ஆவது இப்போது நின்று இருந்தது. notepad ஓபன் ஆக, 'சொல்லு மோகன்' என்று டைப் ஆனது.
மோகனின் உடல் முழுவதும் சிலிர்க்க, அவனது கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. 'ப்ரி... ப்ரியா.' என்று குழறியது.
'மோகன். ப்ரியா தான். எப்படி இருக்க?' என டைப் ஆகியது.
'மோகனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
'ஏன் பிரியா இப்படி பண்ண. என்ன விட்டு போக எப்படி துணிஞ்ச? ஏன், நா எல்லாம் இல்ல? உன்ன விட்ருவோமா?' என அழுது கொண்டே கேட்கலானான்.
நோட்பேட் டைப் ஆக ஆக, மோகன் அதை படித்தான்.

நா பண்ண மிகபெரிய தப்பு தான் மோகன், தம்பி ஆபரேஷன்கு பணம் லோன் வாங்கினதுதான். அதுவும், உங்க ரெண்டுபேருக்கும் தெரியாம வாங்கினது தான். என் கஷ்டம், என்னோட போகட்டும்னு தான் சொல்லல, மூணு பேருமே கஷ்டத்துல இருந்த டைம். உனக்கும், கார்த்திக்கும் எடுகேசன் லோன் இருந்ததல தான் சொல்லல.  அந்த ஆபரேஷன்கு அப்புறம், இருந்த ஒரே சொந்தம், ஆனந்த்ம் என்கூட இல்ல, நிம்மதியும் இல்ல. வாங்கின 5 லட்சத்துக்கு, வர சம்பளத்துல, எல்லாமே கடனுக்கு போய்டுச்சு.
பேங்க்ல இருந்து ராகேஷ் வேற என்ன டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டான். வீட்டுக்கு வந்து, ஆள் வச்சு மெரட்டினான். தம்பிய இழந்த சோகம், ராகேஷ் பண்ணிய அவமானம், ஆபீஸ்ல வொர்க் பிரஷர்நு, என்னால தாங்க முடியாத அளவுக்கு போய்டுச்சு. உங்கள மாதிரி, பிரச்சனைய வெளில சொல்ல எனக்கு தெரியல. அது ஒரு கட்டத்துல, என்ன தற்கொலைக்கு கொண்டு போய் விட்டுடுச்சு."

"நான் வேற யாரோவென மிகவும் பயந்து போய் இருந்தேன். பிரியா, எனக்கு உதவி செய்வது நீதானே?,"
"ஆம்" என டைப் ஆனது.
"அப்போ, எனக்கு உதவி செய்யும் நீ, கூட இருக்கறவங்கள ஏன் அச்சிடென்ட் பண்ணனும்? அவங்கள ஏன் அச்சிடென்ட் பண்ணனும்?" கேட்டான். பிரியா பேச ஆரம்பிக்கும் முன்பு, போன் ரின்கானது.  "ஆன்சைட்" கால். ரிசீவர்ஐ எடுத்து, பேசினான். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, விளக்கம் கொடுத்தவன், ரிசீவர்அஹ வைக்க போனவன், ரிசீவர் ஒயரில் சுத்தி இருந்த சாருமதி கொடுத்த முக கண்ணாடி, மேஜையில் இருந்து தவறி, சரியாக அங்கு இருந்த டைல்ஸ்ல் பட்டு உடைந்தது.
பதட்டமான மோகன், மீண்டும் மனதை ஒருநிலைபடுத்தி ப்ரியாவுடன் பேச முயற்சி செய்தான். பயனற்று போக, சாருமதி உள்ளே அந்த அறையினில் நுழைந்தாள்.  சாருமதி கடிந்து கொண்டாள், அவ்வளவு தூரம் சொல்லியும் இப்படி கவன குறைவா இருந்திருக்கிங்க? இப்போ அவங்களிடத்தில் உங்களால் பேச முடியாது என்று கூறியவள், உடனே அந்த உடைந்த கண்ணாடியை எடுக்க உதவியாளரிடம் கூற, அவனும் உடைந்த கண்ணாடி சில்கலை சேகரித்து, கருப்பு பையில் போட்டு கொண்டாள். பிரியா இப்பொழுது கட்டுப்பட்டு விட்டாள். மேற்கொண்டு அவளிடம் பேசி பார்க்க வேண்டும். இனிமேல் அவளிடம் இருந்து எந்தவிதமான பிரச்னையும் வராது. பேசி விட்டு, பிறகு சொல்கிறேன் என்று சொல்ல, இதை இப்போதே தெரிந்து கொள்ள எதாவது வழி இருக்க என்று கேட்டான் மோகன். இல்ல மோகன். இது இப்போ ரொம்ப கஷ்டம். நான் ட்ரை பண்ணிட்டு சொல்லுகிறேன். அது வரைக்கும் ஒன்னும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டு சருமதியும் அவனது உதவியாளரும் கிளம்பினர், அவர்கள் சென்ற பின்பு, வெகு நேரம் வரை இருவரும் ப்ரியாவை பற்றி பெசிகொண்டிருன்தனர். பிறகு,  கார்த்திக் யோசனையில் ஆழ்ந்துவிட, மோகன் ப்ரொடக்சன் பிரச்சனையில் மூழ்கி இருந்தான். சிறிது நேரத்திற்கு பின்பு, பிரச்னை பெரிதாக,
'கார்த்திக், நெறைய ப்ரோடச்சன் ப்ரொப்லெம். மேனேஜர் வேற ஆபீஸ் வர சொல்றான்.  ப்ரொப்லெம் பெரிசா இருக்கு, நான் ஆபீஸ் போய் இஸ்சுவ என்விரோன்மென்ட்ல டீபக் பண்றேன். என் பைக்ல பெட்ரோல் ட்ரை. நா உன்னோட பைக் அஹ எடுத்துட்டு போறேன் என்று சொல்லி விட்டு, பதிலுக்கு காத்திராமல், சார்கரில் இருந்த போனை எடுக்க, அது கொடுத்த லோ பாட்டரி அலெர்ட் ஐ அலட்சியபடுதிவிட்டு, பைக் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
 அவன் கிளம்பி, சரியாக, 10வது நிமிடத்தில், சருமதியிடம் இருந்து போன் வர, கண்மூடி இருந்த கார்த்திக் போனை எடுத்தான்.
'ஹலோ, கார்த்திக்?, நா சாருமதி பேசுறேன்' என்று பதட்டமாக பேசினாள்.
'அங்க மோகன் இருக்காரா?  அவருடைய மொபைல் ட்ரை பண்றேன். நாட் ரியச்சப்ல்நு வருது. உன் கூட இருந்த அவர் கிட்ட கொடு.'
'என்ன ஆச்சு மேடம்? ஏன் இவ்வளவு பதட்டமாக பேசுறீங்க?' என்று கார்த்திக் பதட்டதுடன் சோபாவில் இருந்து எழுந்தான்.
'இங்க பாரு கார்த்திக், எக்காரணம் கொண்டும் மோகனை வீட்ட விட்டு வெளியே விட்டு விடாதே, அப்படி அவன் வீட்டை விட்டு போனால், அவனது உயிருக்கே ஆபத்து.' என்றாள் சாருமதி.
கார்த்திக்கிற்கு உடல் எல்லாம் சிலிர்க்க, 'மேடம். என்ன சொல்றீங்க? அவன் இப்போ தான் 10 நிமிஷம் முன்னாடி ஆபீஸ்ல ஒரு ப்ரொப்லெம்நு வீட்டை விட்டு கிளம்பினான்'
'ஐயோ கார்த்திக். என்னால இப்போ விவரமா சொல்ல முடியாது. நா என்ன விசயம்னு அப்பறமா விவரமா சொல்றேன். முதல்ல அவன தொடர்பு கொள்ள முடியுமான்னு பாரு. அவன் ஆபீஸ் பக்கத்துல இருக்கற சிக்னல் பக்கம் இப்போ போக வேண்டான்னு சொல்லு.  அவனை எப்படியாவது என்னோட ஆபீஸ்கு கொண்டு வா ப்ளீஸ்' என்றாள்.
இதோ இப்போவே நா போறேன். என்று பதட்டத்துடன் பைக் கீயை எடுத்துக்கொண்டு, வாசலை நோக்கி ஓடினான். பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டே, கார்த்திக்கின் போன் ஐ தொடர்பு கொண்டான்.
ரிங்கனது. மோகன் பிக் அப், பிக் அப். என்று சொல்லிக்கொண்டே, பைக்ஐ திருப்ப, பைக் திணறி திணறி ஆப் ஆனது. கிக்கரை உதைத்து பார்த்தான். பெட்ரோல் இல்லாமல், போனது அப்போது தான் உணர்ந்தான். 'ச்சே. இவன்கிட்ட எதனை தடவ சொன்னாலும், வண்டியை இப்படி ட்ரை பண்ணி நிப்பாட்டி இருக்கனே என்று மோகனை திட்டி கொண்டே, சருமதிக்கு போன் செய்தான். மறுமுனையில் சாருமதி எடுக்க, "என்ன கார்த்திக். மோகன் கிட்ட பேசினாய?" என்றாள். இவன் நடந்தவற்றை கூற, 'என்ன பசங்கப்பா நீங்க, எவ்ளோ பெரிய ஆபத்தில் இருக்கிறன் தெரியுமா? மோகன் ஆபீஸ் அட்ரஸ் சொல்லு. நானே கார்ல போய்க்கிறேன்" என்றாள், கார்த்திக் அட்ரஸ் சொல்ல, சாருமதி டிரைவர் உடன் கிளம்பினாள், கார்த்திக்கிற்கு நடந்தவற்றை கூறியவாறே.
'கார்த்திக், நீங்க நெனைக்கற மாதிரி பிரியா மோகனுக்கு உதவி செய்தது உண்மை தான். அதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. உங்களுக்கு ராகேஷ் ஐ ஞாபகம் இருக்கிறதா?"
"ப்ரியாவுக்கு லோன் ஏற்பாடு செய்த ராகேஷ் அஹ?" என்றான்.
"எஸ். அவனே தான். நீங்கள் உங்க பிரின்ட் பிரியா மேல வச்சிருந்த பாசத்தால, மோகன் அவன் போலீஸ்ல் கம்ப்ளைன்ட் செய்ஞ்சு, அரஸ்ட் பண்ணிருக்கிங்க. அந்த டைம்ல அவனோட தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்காங்க. அந்த கல்யாணத்துக்கு, இவன் வொர்க் பண்ண பிரைவேட் பேங்க் இவனோட இன்சென்டிவ் 3 லட்சம் தர இருந்தது.  மேலும் 2 லட்சம் கடனாவும் தர்றத இருந்தது.கூடவே, இவனது வொர்க் பெர்போர்மான்ஸ் பிளஸ் மோகன்கூட வேல செஇஞ்சுட்டு இருந்த ராஜி, ஸ்ரீகாந்த், பார்த்திபன் இவங்க எல்லோரும் லோன் வேண்டாம்னும், ப்ரியாவின் சாவிற்கு ராகேஷ் காரணம்னும் சாட்சிய இருந்திருக்காங்க.  ஆனா, இந்த பிரச்சனைல அவன் கைதான பொது,  அவனுக்கு பங்கில் இருந்து எந்த விதமான சப்போர்ட்ம்  செய்ய வில்லை. அது மட்டும் இல்லாமல்,இதெல்லாம்  அந்த பிரைவேட் பேங்க் சொல்லிய முறைகள்நாலும், இதெல்லாம் வ்ரிட்டேன்  ல இல்ல இவன் பங்கின் விதிமுறைகளை மீறி, நடந்து கொண்டதாகவும், பங்கின் நற்பெயரை காப்பாற்றி கொள்ளவும், ராகேஷ் ஐ பணிநீக்கம் செய்துள்ளது. . அவனுக்கு சேர இருந்த பணமும் இவனுக்கு கிடைக்க வில்லை. இதனால, அவனோட தங்கச்சி கல்யாணம் நின்னு போனது, வேலையும் போய்டுச்சு. இதுல நடந்த ஒரே விஷயம், பிரியா தற்கொலை செய்ஞ்சது. நம்மால் எவ்வளவு கட்டமுடியும்னு, வருமானதிற்கு அதிகமா கடன் வாங்கறதும், வாடிக்கையாளர்களால் எவ்வளவு கட்ட முடியும்னு வருமான உச்சத்திற்கு அதிகமா கடன் கொடுக்கறதும், இதுல ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. இப்போ ராகேஷ் உயிரோட இல்ல. பிரியா இறந்து, ராகேஷ்கு தண்டனை கிடைச்சப்போ, அவன் தங்கை கூட வந்து பார்க்க வில்லை. இதெல்லாம் தாண்டி, 6 மாத தண்டனைக்கு பிறகு வெளியே வந்த ராகேஷ், பங்கில் வேலை கிடைக்க வில்லை. வேற வேலையும் கிடைக்க வில்லை. இதற்கு எல்லாம் காரணமாய் இருந்த உங்க பிரின்ட், மோகனை பழிவாங்க, நைட் ஷிபிட்இல் வொர்க் பண்ணிகொண்டிருந்தவனை, மடக்கி கொல்ல திட்டம் போட்டு இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக, அந்த விபத்தில் இருந்து மோகனை காப்பாற்றியது பிரியா. ஆனால், ராகேஷ் அதே சிக்னலில் லாரியில் அடிபட்டு,  அச்சிதேன்ட்ல இறந்துவிட்டார்.  இப்போ, மோகனின் உயிர் பறிக்க துடித்து கொண்டிருப்பது,  அதே ராகேஷ் தான். ராகேஷிடம் இருந்து, காப்பாற்றவே, பிரியா எல்லா இஸ்சுவையும் சால்வ் செய்து, உதவி செஜிருக்காங்க."  என்று முழுவதையும் கூறி முடித்தாள் சாருமதி. இப்போதைக்கு நங்கள் எவ்வளவு சீக்கிரம் உங்க ஆபீஸ் போக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் போறோம். நீங்க, மோகனை ரீச் பண்ண ட்ரை பண்ணுங்க. நானும் பண்றேன்" என்று சொல்லி கால்ஐ கட் செய்தாள் சாருமதி.


சாருமதி திரும்பவும், மோகனின் மொபைல்கு டயல் செய்ய, இந்த முறை ரிங் ஆனது. 'மோகன், தயவு செய்து போனை எடு' என்று திட்டி கொண்டே, காத்திருந்தாள்.
'ஹலோ, சொல்லுங்க சாருமதி. என்றான் மோகன் மறுமுனையில்.
'மோகன்.. இப்போ எங்க இருக்க?'
'ஆபீஸ் கிட்ட இருக்கேன் சாருமதி. என்ன விஷயம்? அன்ய்திங் இம்போர்டன்ட்?' என்றான்.
"ஐயோ மோகன், நீங்க எங்க இருந்தாலும், உடனே, உன் ரூமுக்கு, இல்லைனா, என்னோட ஆபீஸ்கு வா. நீ இப்போ மிக பெரிய உயிர் போற ஆபத்தில் இருக்கிற' என்றாள்.
'தட்..' என ஒரு மிக பெரிய சப்தம் மறுமுனையில் கேக்க, 'பீப்..பீப்.. ' என சௌண்டுடன் கால் முடிந்தது.