Friday, October 10, 2014

நினைவுதிர் காலம்



 'டேய்.. எனக்கு ஒன்னும் இல்ல. நீ மொதல்ல ஆஃபீஸ் கெளம்பு.' இரும்பிய  படியே பெட்டில் இருந்து எழுந்தாள் காவ்யா.
'இல்ல. உனக்கு இன்னும் ஃபீவர் இருக்கறமாதிரி இருக்கு. வேணும்னா  இன்னைக்கும் வொர்க் ஃபரம் ஹோம் போடறேனே..?' இது ரிஷி.
ஆஃபீஸ் கெளம்ப ரெடி ஆனாலும் காவியாவை இப்படி விட்டுச் செல்ல மனமில்லை. ஆனால், ரிஷிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் என்பதால், ஆபீஸ் கிளம்பி கொண்டிருந்தான்.
'யு கேரி ஆன் ரிஷி. ஐ வில் டேக் கேர் ஆஃப் மைஸெல்ப்' என்று சொல்லி விட்டு, அவனை முதுகில் கை வைத்து தள்ளினாள்.
'சரி. நா கெளம்பறேன் அப்போ. பத்திரமா இரு. ஓகே வா? ஏதாவது முடியலைன்னா கால் பண்ணு' என்று சொல்லிக் கொண்டே, அபார்ட்மெண்டில்  இருந்து கீழே இறங்கி, கார் ஸ்டார்ட் பண்ண, பால்கனியில் இருந்து அவனை பார்த்துக்  கை அசைத்தாள்.
'பார்த்தியா.. அவன் உன்ன விட்டுட்டுப்  போய்ட்டான். அவனுக்கு, உன்ன விட, ஆஃபீஸ் தான் முக்கியம்.'
திடுக்கென்று சுத்தியும் பார்த்தாள் காவ்யா. மீண்டும் அந்த குரல் அவளுக்கு கேட்டது.
'இல்லை. அவன நான் தானே ஆஃபீஸ் போக சொன்னேன்? அப்பறம் எப்படி அவனை குறை சொல்ல முடியும்? ரெண்டு நாள் லீவ் போட்டு, என் அருகில் இருந்து கவனித்து கொண்டானே?' எதிர் கேள்வி கேட்டாள் காவ்யா.
'அப்போ.. நீ போனு சொன்னதும்..ஏன் அவன் ஆஃபீஸ் போறான்? உனக்கு தான் இன்னும் உடம்பு சரியாகலையே?' - குரல்

'இல்லை. நீ என்னை குழப்புற. ஐ வோன்ட் அக்ரீ. அயம் ஆல்ரைட் ' மூச்சிரைக்க ஆரம்பித்தது காவ்யாவுக்கு. வேகமாக உள்ளே சென்று, ஃப்ரிட்ஜ்ஜை திறந்து, வாட்டர் பாட்டிலை காலி செய்தாள்.
'அப்போ அதை நிரூபிச்சுக் காட்டு' என்றது குரல்.
'இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற?'
'கத்தியை கையில் எடு' எதுவும் பேசாமல் கத்தியை எடுத்தாள்.
'இப்போ உன் கையை வெட்டு. அவன் வர்ரானானு பார்க்கலாம்.' என்றது.
மறுப்பேதும் கூறாமல், கத்தியை இடது கையில் எடுத்து, வலது கையை லாவகமாய் நீட்ட, கூர்மையான அந்தக் கத்தி, கையில் மெலிதாய் கீறியது.
'நான் மெதுவாக கீறினேனா இல்லை கத்தி ஏதாவது ப்ராப்லமா என அவளது மூளை அவளுக்கு யோசனைகளை அனுப்ப, மெதுவாக, சிவப்பு கோடு தெரிய, ரத்தம் கையில் இருந்து வடிய ஆரம்பித்தது. சுயநினைவுக்கு வந்த காவ்யா பதறிப்  போய், போன் எடுத்து, ரிஷி நம்பரை டயல் பண்ண, இரண்டாவது ரிங்கில் எடுத்தான்.
'ஹலோ காவ்யா. சொல்லு.' என்றான்.
'ரிஷி.. மறுபடியும்.. ' என சொல்ல வந்தவள், தலையை ஏதோ சுழற்ற, மயங்கி விழுந்தாள்.

நினைவு வரும்போது, கைகளை பிடித்து, தடவிக்கொண்டு, காவ்யாவின் அருகில் ரிஷி உட்கார்ந்திருந்தான். 'எங்கே விழித்துப்  பார்த்தால், கையை விலக்கி விடுவானோ' என்று கண்கள் மூடியபடியே படுத்திருந்தாள்.

ஒரு வார ஓய்வுக்குப்  பின், ஆஃபீஸ் போக தயாராகிக் கொண்டிருந்தாள் காவ்யா. 'ரிஷி.. லஞ்ச் பாக்ஸ் எடுத்துட்டு போ.. வழக்கம் போல மறந்துடாதே.' சொல்லிவிட்டு, ஐபோனில் வெதறை ஒரு நோட்டம் விட்டாள்.  விண்டர் கோட்டை எடுத்து போட்டுக் கொண்டு, கார் கீயை  எடுத்து, ஆட்டோ ஸ்டார்ட் பட்டனை அழுத்தி விட்டு,  லஞ்ச் பேக், லேப்டாப் பேக் உடன் அபார்ட்மென்ட்டில் இருந்து வெளியே வர, சிகாகோ ஒற்றி இருந்த அந்த கிராமத்தை விடிய விடிய பருத்தி பஞ்சாக மாற்றிவிட்டிருந்த பனி, அவளது முகத்தையும், விண்டர் கோட்டையும் தன் வெண்துளிகளால் நிரப்ப பார்த்தது. வழக்கம் போல தன்னுடைய ரத்த நிற கேம்ரி, வெண்கம்பளம் போர்த்தியது போல பனி மூடியிருந்தது. ஸ்டார்ட் ஆகியிருந்த காரை  அன்லாக் செய்து, கொண்டுவந்த பேக்ஸை பின்னாடி வைத்து விட்டு, கிளிப்பை எடுத்து மாட்டிக்  கொண்டு, கிளீனிங் பிரஷால் அந்த பனியை விளக்க, மறைந்திருந்த ரத்தநிற ரதம் வெளிப்பட்டது. டிசம்பர் மாத குளிர் காற்று, அவளது மூக்கையும் காதையும் ஒரு பதம் பார்த்து கொண்டிருந்தது.
காரை எடுத்துக்கொண்டு, ஆஃபீஸை  நோக்கி காரை விரட்ட, அது அம்பாக சீறிப்  பாய ஆரம்பித்தது.

ஆஃப்ஷோர்க்கு அனுப்ப வேண்டிய மெயில்களுக்கு எல்லாம் ரிப்ளை  பண்ணிவிட்டு, எல்லாமீட்டிங்கும் 12 மணிக்கு முடிய, லேசாக பசி மெல்ல வயிற்றை கிள்ள ஆரம்பித்தது. லஞ்ச் முடித்து, சீட்டுக்கு வந்து அமர்ந்தாள் காவ்யா. மீண்டும் மெயில் செக் பண்ண, நோ நியூ மெய்ல்ஸ் என்று வர, நிம்மதியாகி, தலையை சாய்த்து, கண்ணை மூடினாள்.

ஐந்து நிமிடம் இருக்கும். போன் ரிங்கானது. திரையில் ரிஷியின் போட்டோ தெரிய, பச்சை நிறத்தை ஸ்லைடு செய்து காதில் ஒற்றினாள் போனை.
'சொல்லு டா,'
'......'
'எப்போ.? ஈவினிங் தானே.?
'......'
'சரி. ஆபீஸ் முடிஞ்சு வர்றப்போ பிக் அப் பண்ணிக்கறேன். அந்த ஓட்ட காரை விக்க சொன்னா கேட்டாதானே? கார் எப்போ திரும்ப பிக்கப்  பண்ணனும்?'
'......'
'ஓகே. டன்.  ஏய் ஒன் மினிட். ஈவினிங் அப்படியே வால்மார்ட்டுக்கும் , இந்தியன் ஸ்டோருக்கும் போக வேண்டியிருக்கும். நாளைக்குத்  தான் போகலாம்னு நெனச்சேன். பட், நீயும் ஈவினிங் வர்றதால, இன்னிக்கே போயிட்டு வந்திடலாம் . ஓகே?'
'......'

'எவ்ளவு நேரமா வெயிட் பண்றது ரிஷி? சீக்கரம் வாடா' இது காவ்யா.
'......'
'என்ன, இன்னும் 5 மினிட்ஸா? அப்போ, இங்கேயே , ஃப்ரண்ட் பார்க்கிங்ல வெயிட் பண்றேன் வா.'
மொபைல் ஆஃப் செய்துவிட்டு, ஒரு இளையராஜா சாங்கை ப்ளே செய்துவிட்டு, கண்ணை மூடினாள்.

'டொக்.. டொக்..' விழித்து பார்த்தாள். ரிஷி லேப்டாப் பேக்குடன் குளிரில் நின்றிருந்தான். காவ்யா கார் கதவை திறக்க, அவன் பேக்கை பின்னாடி வைத்துவிட்டு, பக்கத்து சீட்டில் அமர்ந்து, சீட் பெல்ட்டை  மாட்டிக்கொண்டு, 'லெட் அஸ் கோ' என்று சொல்ல, கியரை  டிரைவ் மோடில் மாற்றி, காரை நகர்த்தினாள் காவ்யா.

'இந்த டைம். கண்டிப்பா உறைஞ்சு போன நயக்ரா பார்த்தே ஆகணும்.' - ரிஷி.
' நோ வே. என்ன விளையாடறயா? ஏப்ரல்ல, கண்டிப்பா ஊருக்கு போகணும். உன் அப்பா, அம்மா கிட்ட பேசி, கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கணும். அதுக்கு டிக்கெட் புக் பண்ணணும். நெறைய பர்சேஸ்   பண்ணனும்பா.. பட்ஜெட் பா. பட்ஜெட்..'

'ஹே.. ஹே.. ஊருக்கா..? நானா..? சான்சே இல்ல. கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? நாம வந்து ரெண்டு வருஷம் தான் ஆச்சு. நெக்ஸ்ட் இயர், கண்டிப்பா போறோம். கல்யாணம் பண்றோம். ஓகே.? இப்ப.. நம்ம.. இந்த நியூ இயரை நயக்ரால.. கொண்டாடறோம்..'

'வேணாம் ரிஷி. போன வருஷமும் இதேதான் சொன்ன.. பட், இதே மாதிரி ஒரு ட்ரிப் போட்டு, காலி பண்ண. இப்பவும் அதே பண்ற. முடியாது  கண்ணா. இந்த வருஷம். கண்டிப்பா இந்தியா போறோம்.'
'சரி. அப்படின்னா.. ஒரு பெட்..' - ரிஷி.
'கண்டிப்பா'
'இப்போ.. ரொம்ப குளுரா  இருக்கில்ல.. அதனால.. பந்தையத்தை கொஞ்சம் ஹாட்டா வச்சுக்கலாம்.'

'டேய்.. கொரங்கு பையா.. உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும்.. அதெல்லாம் வேணாம். நார்மல் பந்தயம் தான்' ஒரு கையால் ஸ்டேரிங்கை பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால், குழந்தையை மிரட்டுவது போல, ஆட்காட்டி விரலை ஆட்டி, நாக்கை சுழற்றி காட்டினாள் காவ்யா.
டக்கென, கையை நோக்கி, முத்தம் கொடுக்க வாயை குவித்துக்கொண்டு, கிட்டே எம்பினான் ரிஷி. சுதாரித்துக்  கொண்ட காவ்யா, விரலை மடக்கிக் கொண்டு, அவன் தலையில் கொட்ட பார்க்க, கார் ஆப்போசிட் லேனில் போக, முனைந்தது. சுதாரித்து, ஸ்டேரிங்கை  திருப்பினாள் காவ்யா.

வால்மார்ட்டில்  ஜூஸ் எடுத்து கொண்டே, காவ்யா, ரிஷியிடம் கேட்டாள். 'என்ன பந்தயம் அது?'
'நா சொன்னா.. அப்பறம் பந்தயத்துக்கு ஒத்துக்கணும்.' என்றான் ரிஷி.
'ஆஹா .. அது முடியாது.. ஃப்ராட்.. உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும்'
'சரி.. அப்போ நா சொல்லல.. போதுமா..?' - ரிஷி
'ஹ்ம்ம். சரி. பரவா இல்ல.. சொல்லு' என்றாள்.
காதில் ஏதோ சொல்ல.. ரிஷியின் தோளில் அடித்தாள்.

வெண்பனி காலம் முடிந்து, பச்சை நிறம் வியாபிக்க ஆரம்பித்திருந்தது.
சிகாகோக்கும் சென்னைக்குமான  இரண்டு டிக்கெட்டுகளை புக் செய்து விட்டு, கன்ஃபார்மேசன் மெயிலை  ரிஷிக்கு  ஃபார்வர்ட் செய்து விட்டு, ரோல்லிங் சேர்ரில் தலையை கொடுத்து சாய்ந்தாள்.

மூன்று வார ஷாப்பிங் எல்லாவற்றையும் பேக் செய்து முடித்து, டைம் பார்த்தாள். மணி இரவு 8ஐ காட்டியது. நாளைக்கு ஃபிளைட். இன்னும் ரிஷி வரவில்லை என நினைத்துக்கொண்டே, டின்னெரை  முடித்தாள். பெட்டில் தலை வைத்து, ஸ்மார்ட் டிவியில் ஓடிய பாடலை பார்த்துக்  கொண்டே உறங்கிப் போனாள். மெல்லிய இசை போனில் இருந்து வந்து, தூக்கத்தை கலைத்தது. பச்சை நிற பட்டனை அழுத்தி, காதில் பொருத்தினாள்.
'ஹலோ... சொல்லு ரிஷி.. எங்கடா  இருக்க..'
'எனக்கொரு இஸ்யு.. வர எப்படியும் ஒரு மணி ஆகிடும். நீ தூங்கு. சாப்டியா?'
'ஹ்ம்ம். சாப்டேன். டேய். நாளைக்கு பிளைட் வச்சுட்டு இன்னும் அங்க என்ன பண்ற? சீக்கரம் வா.. மதியம் 12 மணிக்கு நம்ம போர்டிங் பண்ணனும். ஞாபகம் வச்சுக்கோ' என்று சற்றே கடிந்து கொண்டாள்.
'சரிடி. வந்துடறேன். நீ தூங்கு. பை. குட் நைட்.' - ரிஷி
'குட் நைட்'.
5 மணிக்கு ஏதோ சப்தம் கேட்டு, விழித்து பார்த்தாள் காவ்யா. மெலிதாய் விடிந்திருக்க.. பெரும் சப்தத்துடன் மழை ஊற்றிக்கொண்டிருந்தது. திரும்பிப் பார்க்க, ரிஷி இன்னும் வந்திருக்க வில்லை.
'என்ன இவன்.. இன்னும் வரல.. ' என்று யோசித்தவாறே, போனை  எடுத்து, ரிஷி நம்பருக்கு  டயல் செய்தாள்.

'யு ஹவ் ரீசிவெட் வாய்ஸ் மெயில்..' என்று ஆரம்பிக்க.. மெலிதாக கோபம் வந்தது. போனை எடுத்து பெட்டில் எரிந்து விட்டு, திரும்பவும் தூங்கிப் போனாள். ஒரு அரைமணி நேரம் கழித்து, போன் ரிங்கானது. எடுத்தாள்.
'ஹே.. காவ்யா.. இஸ்யு இன்னும் சால்வ் ஆகல. சோ, நீ எல்லாம் பேக் பண்ணி ரெடியா இரு. ஐ வில் ஜாயின் வித் யு இன் ஏர்போர்ட். என்ன ஓகே வா?' என்றான்.
'என்ன, விளையாடறயா? நாலு பேக். என்னால முடியாது. அதுவும் இல்லாம, இன்டர்நேஷனல் ஃபிளைட். 3 ஹௌர்ஸ் முன்னாடி இருக்கணும் ஏர்போர்ட்ல. நீ சொல்றத பார்த்தா .. வரமாட்ட போலவே.. ' - இது காவ்யா.
'இல்லமா பட்டு குட்டி. கண்டிப்பா வந்துடுவேன். 10 குள்ள வீட்ல இருப்பேன். அதுக்குமேல வரலனா, நீ டைரக்டா டாக்ஸி பிடுச்சு ஏர்போர்ட் வந்திடு. அங்க மீட் பண்ணிக்கலாம். நா என் காரை ஆஃபீஸ்ல விட்டுட்டு, ஏர்போர்ட் வந்திடறேன். ஓகே?' என்றான் ரிஷி.
'உனக்கு எப்பப் பாரு இதே விளையாட்டா போச்சு ரிஷி. எனக்கு பயமா இருக்கு. எதாச்சும் வராம இருந்தா, ஐ வில் நாட் கம் பேக் அகைன்  ஹியர். தெரிஞ்சுக்கோ.'
'புரிஞ்சுக்கோடி.. நா என்ன வேனும்னா பண்றேன். ப்ரோடக்ஷன் இஸ்யு. கண்டிப்பா இருந்தே ஆகணும். இல்லனா, போன்போட்டே சாவடிப்பாங்க. வந்தடறேன். இஸ்யு சால்வ் ஆகுதோ இல்லையோ, 11 குள்ள, நா ஏர்போர்ட்ல இருப்பேன். மேனேஜர் கூப்பிடறார். பை. வக்கறேன்' பதிலுக்கு காத்திராமல், கட் செய்தான்.
எழுந்து, எல்லா வேலையையும் முடித்து விட்டு ஹேண்ட் லக்கேஜ் பேக் பண்ணி முடிக்க, மணி 10 ஐ தொட்டிருந்தது. ஹாலில் உக்காந்திருக்க, சோர்வில், மீண்டும் தூங்கி போனாள்.
11 மணிவாக்கில், வேகமாக, கதவை திறந்து கொண்டு, வந்து சேர்ந்தான் ரிஷி. திடீரென, வந்ததால், பதட்டத்தில் விழித்துப்  பார்த்தாள் காவ்யா.
'எரும மாடு.. ஆடி அசஞ்சு வர்ற.. டைம் பாத்தியா? சீக்கரம் குளிச்சுட்டு வா..'
'10 மின்ஸ்.. பாரு.. உடனே வந்தடறேன்..' வேகமா ஓடிச்சென்று,
பாத்ரூம்மை சாத்திக் கொண்டான்.
டாக்ஸிக்கு போன் செய்ய, சரியாக, 20வது நிமிடத்தில், டாக்ஸி வந்து சேர்ந்தது. இரண்டு பேரும், லக்கேஜ்ஜை காரில் ஏற்றிவிட்டு, இவர்களும் காரில் ஏற, கார் ஏர்போர்ட்டை நோக்கி பறந்தது.

ஏர்போர்ட்டில் இறங்கி, டெர்மினல் 5 இன்டர்நேஷனல் சென்றனர். போர்டிங் இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை. ஒரு மென்மையான குரல், விமானங்களுக்கான வரவு, தடம் எண்ணை ஒரே ராகத்தில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க, ஊர் செல்பவர்கள், புதிதாக வந்தவர்கள் என படு பிஸியாக இயங்கி கொண்டிருந்தது. வெளியில், மழை பெய்ய தொடங்க.. பல நாட்டு கொடிகள், மழையில் நனைந்து, நனைந்த ஆண் மயில் போல வாடி இருந்தது.
இதமான குளிர், ரிஷியின் அருகாமை, பல வருடங்கள் கழித்து ஊர் செல்லும் ஆர்வம் என மகிழ்ச்சியில் காவ்யா இருந்தாள்.
இவர்களுக்கான அனுமதி ஒப்பந்தத்தை படிக்க ஆரம்பித்து, ஏதோ காரணங்களுக்காக, 2 மணிநேரம் தாமதமாக போவதாக அந்த பெண் அறிவித்தாள். அதைக் கேட்டு, ரிஷி, அவனது கைகளை பிடித்து அமர்ந்திருந்த காவ்யாவை பார்க்க, காவ்யா ரிஷியை பார்த்தாள்.
'சரி. கொஞ்ச நேரம் தூங்கறேன். ரொம்ப டயர்டா இருக்கு. என்னை எழுப்பு. சரியா?' என்றான் ரிஷி.
'ஹ்ம்ம்' என்று சொல்ல, காவ்யாவின் தோளில் சாய்ந்து கண்ணை மூட ஆரம்பித்தான். அவனை பார்த்து, சிறிதாய் புன்னகைத்து விட்டு, இவளும், அவன் தலையின் பக்கம் சாய்த்து கண்ணை மூடினாள்.

'மேடம். மேடம்.. ' ஒரு பெண் காவ்யாவை எழுப்ப, கண்விழித்து பார்க்க, தலை வலிக்க ஆரம்பித்தது. என்ன என்பது போல அந்த பெண்ணை ஏறிட்டாள்.
'ஆர் யு மிஸ்.காவ்யா?' என்றாள் அந்த ஆங்கில பெண்.
'எஸ்' என்று, எழுந்தாள்.
'திஸ் ஸ் பைனல் கால் டு போர்டு தி ஃபிளைட் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ். ப்ளீஸ் ப்ரோசீட் வித் போர்டிங் மேம்' என்று கூறி விட்டு, சென்றாள்.

எழுந்துப் பார்க்க.. அவள் மட்டும் தனியாக இருந்தாள்,ரிஷியை காணவில்லை. அவனது பேக்கும் காணவில்லை.  திருதிருவென விழிக்க, ஏர்போர்ட் டெர்மினலை சுற்றிலும் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யார் யாரோ தென்பட, ரிஷியை காணவில்லை. போர்டிங் செய்ய இன்னும் கடைசி சில நிமிடங்கள் இருக்க, போனை எடுத்து ரிஷி எண்ணுக்கு டயல் செய்தாள்.  சில நொடி டயல் போனபின்பு, "தி நம்பர் யு ஹேவ் டயல்டு ஹஸ் பீன் டிஸ்கெனக்டேட்  இஸ் நோ லாங்கர் இன் சர்வீஸ்" என்றது.
காவ்யாவுக்கு முகம் வேர்க்க, 'டேய் எங்க இருக்க;' என்று ஒரு மெசேஜ் அனுப்பினாள். உடனடியாக ஒரு பீப் சப்தத்தை போன் கொடுக்க, எடுத்து பார்த்தாள். திரையில், 'தி  ஏடி அண்ட் டி ஸப்ஸக்றைப்பர் யு  ஆர் டிரெய்யீங் டு ரீச் இஸ் நோ லாங்கர் இன் சர்வீஸ்' என்றது. வெளியில் பெய்யும் மழையை விட இவளுக்கு அதிகமாக வியர்க்க ஆரம்பித்தது.
'இவன் ஏன் இப்படி என் கூட விளையாடுகிறான் என்று திட்டிக் கொண்டே, வெளியில் ஓடினாள்.
மழைத்துளி இவள் மீது தெறிக்க, தொப்பலாக நனைக்க ஆரம்பித்தது.

இரண்டு மூன்று டாக்ஸி இவளை வேகமாக கடந்து செல்ல, ஒரு மஞ்சள் நிற டாக்ஸி இவளின் முன்னாடி சறுக்கிட்டு நின்றது.
'ஹலோ மேம்.. ஹொவ் கேன் ஐ ஹெல்ப் யு?' என்றான் அந்த வெள்ளைக்காரன்.
அப்போதுதான் அவனும் இவளை கவனிக்க, இவளும் இவனை எங்கோ பார்த்தது போல தோன்ற, அவனே ஆரம்பித்தான். 'மேம். எனி ப்ராப்லெம்? ஃபிளைட் எதாச்சும் லேட்டா?' என ஆங்கிலத்தில் கேட்க.
இவளுக்கு பேச்சு வராமல், நா குழறியது. 'இல்லை. எங்கூட வந்தவர காணோம். அதான் எங்கனு தேடிட்டு இருக்கேன் என்று தன் இயலாமையில், கண்ணீரோடு கூற, 'நோ மேம். யு ஆர் மிஷ்டகேன் மிஸ்டேக்கன். நீங்க மட்டும் தான் என்கூட வந்தீர்கள். வேற யாரும் வரவில்லை.' என்றான்.
இதை கேட்க கேட்க, காவ்யாவுக்கு, பூமியே நழுவுவது போல தோன்ற, அந்த மழை நேரத்தில், கண்கள் இருட்டி கொண்டு வர, மயங்கிச்  சரிந்தாள்.


*******************************


'பீப் பீப்' என ஒலி எழுப்பிக் கொண்டு ஒரு கருவி இருக்க, இன்னொரு திரையில் பலவிதமான கோடுகளும், பங்குசந்தை நிலவரம் போல ஓடிக் கொண்டிருந்தது. காவ்யா கண்களை மூடி உறங்கி கொண்டிருந்தாள்.   ராகவ் தன் தலையில் கைவைத்து முடியை தூக்கி உட்கார்ந்திருந்தான்.
'ஆர் யு மிஸ்டர் ராகவ்?' - ஒரு வெள்ளைக்கார நர்ஸ் பச்சை நிறஉடையில் முகத்திற்கு இட்டிருந்த வெள்ளை மாஸ்க்கை  கழற்றியபடி கேட்டாள்.
'எஸ் ஐ  எம்' என்று சொல்லிவிட்டு எழுந்து நின்றான்.
டாக்டர் ராபர்ட் வாண்ட்ஸ் டு டாக் வித் யு ரெகார்டிங் காவ்யா. ப்ளீஸ் கோ டு கன்சல்ட்டிங்  ரூம் இன் செகண்ட் ப்ளோர்' என்று கூறி விட்டு, காவ்யாவின் அருகில் இருந்த மானிட்டரை பார்த்து, ஏதோ நோட் செய்ய ஆரம்பித்தாள்.

ராகவ் டாக்டரைப் பார்த்துப் பேசும்முன், ராகவ் பற்றிய ஒரு அறிமுகம். அமெரிக்காவில் பிறந்தது, வளர்ந்தது இந்தியாவில்.  எம்.எஸ் படிக்க, அமெரிக்கா வந்தவன், இங்கேயே  வேலையிலும் சேர்ந்தான். காவ்யா வேலை செய்யும் அதே எம்என்சியில் டெலிவரி மேனேஜர் ஆக ரெண்டு மாதம் முன்பு சேர்ந்து பணிபுரிந்து வருகிறான். ராகவ் வயசு இருபத்தி எட்டை தாண்ட எத்தனித்திருந்தது.
ராகவ் செகண்ட் ஃப்ளோரை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்து சேர, டாக்டர் ராபர்ட், வெள்ளை நிறத்தில் சர்ட்டும், சந்தன நிற பேண்ட்டும் அணிந்திருந்தான். வயது ஒரு முப்பத்தில் இருந்து, முப்பத்தி நான்குக்குள் இருக்கும்.

ராபர்ட், ராகவ் அறிமுகம் முடிந்து, காவ்யாவை பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். காவ்யாவை பற்றி நிறைய விவரங்கள் ராகவ் தெரிந்திருந்த காரணத்தால், ராகவ் தெளிவான ஆங்கிலத்தில் சொல்ல ஆரம்பித்திருந்தான்.

காவ்யா, பொறந்தது, வளர்ந்தது எல்லாமே இந்தியா, கோயம்புத்தூர்ல தான். காவ்யாவோட ஃபேமிலி ரொம்ப பெரிய குடும்பம். அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, மாமா பொண்ணு, மாமா பையன்னு ஒரு பெரிய குடும்பம். குடும்பத்துல எல்லோருக்கும் சின்ன, செல்ல பொண்ணு வேற.. அவளுக்கு அவ மாமா பையன் மேல அவ்ளோ பிரியம். அவனுக்கும் தான். ரொம்ப நல்லா படிப்பா.  அவ மாமா பொண்ணும் பையனும் ட்வின்ஸ் யாமினி, யாதவ். ரெண்டு பேருமே காவ்யாவவிட ரெண்டு வயசு பெரியவங்க. யாமினி அவ்வளவா படிக்க மாட்டா. ஆனா, காவ்யாவும், யாதவும் ரொம்ப நல்லா படிப்பாங்க.
யாதவுக்கு  ஐஐடீ மும்பைல பிடெக்ல இடம் கெடச்சுது. அதே ஐஐடீல தான் நானும் படிச்சேன். நா இங்க பொறந்தாலும், என் பெற்றோர்கள்  ப்ரெண்ட்ஸ்  எல்லாரும் ஈரோடு பக்கம். அவங்க இங்க செட்டில் ஆகிட்டாங்க. பட், என்னை இந்தியாவுல மும்பைல இருக்கற சித்தப்பா வீட்ல இருந்து தான் படிக்க வச்சாங்க.  யாதவ் ஐஐடில படிக்கரதால, காவ்யாவும் கஷ்டப்பட்டு, ஐஐடில ஜாயீன்  பண்ணிட்டா. யாதவும் நானும் நல்ல பிரெண்ட்ஸ். அதனால எனக்கு அவங்க ஃபாமிலி பத்தி தெரியும்.  நாங்க ரெண்டு பேரும் டிகிரி முடிச்சு, மேல படிக்க இருந்த சமயம். நவம்பர் 2008ல அவங்க ஃபாமிலில எல்லோரும் மும்பை வந்திருந்தாங்க. ஸ்டடி லீவின்றதால, எல்லோரும் கெளம்பி புனேயில் இருக்கற சிதேஷ்வர் கோவிலுக்கு போக முடிவு செய்திருந்தோம். நவம்பர் இருபத்தி ஆறு நைட் பத்து மணிக்கு ட்ரைன் எங்களுக்கு. நான் தான் அவர்களை ரயில்வே ஸ்டேஷனில் ட்ராப் செய்தேன். நான் அவங்கள விட்டுவிட்டு வீடு வந்து சேர்றதுக்குள்ள, சிவாஜி சத்ரபதி ஸ்டேஷன்ல புகுந்த தீவரவாதிங்க ஐம்பத்தி எட்டு பேரை சுட்டே கொன்னிருக்காங்க. அதுல மொத்த குடும்பமும் இறந்துட்டாங்க. இந்த இன்சிடென்ட்டுக்கு அப்புறமா நா இந்தியால இருக்க என்னோட     பேரெண்ட்ஸ் விடல. நான் இங்க வந்துட்டேன். இறந்தவங்க லிஸ்ட்ல காவ்யா உட்பட எல்லோருடைய பேரும் இருந்தது. ஆனா கடந்த ரெண்டு மாசம் முன்னாடி, காவ்யா வேல செய்யற அதே ஆஃபீஸ்ல, அவ டீம்ல சேர்ந்தேன். அவளுக்கு என்னை சுத்தமாக அடையாளம் தெரியல.  அவ்வளவு அழகா சிரித்து சிரித்து பேச கூடிய காவ்யா, அப்படி ஒரு பொண்ணா என்னால பார்க்க கூட முடியல.  டீம்ல இருக்கற மத்தவங்க கிட்ட விசாரிச்சப்போ தான் தெரிஞ்சுது. அவ மட்டும் தனியா ஒரு
அபார்ட்மென்ட்டில  இருக்கறதாவும், யார் கூடவும் பேச கூட மாட்டா  என்றும் தெரிந்தது. அவ கூட இந்தியாவுல வேலை செஞ்ச  ஃப்ரென்ட்  சொன்னத வச்சு பாக்கறப்போ, அவங்க குடும்பத்துல யாருமே உயிரோட இல்லனும், அவ தனியா சென்னைல இருந்ததாவும் சொன்னாங்க. எப்பவும் வொர்க் வொர்க்குன்னு  ஆஃபீஸ்லையே இருப்பதா சொன்னாங்க. அதனாலத்தான் சீக்கரமாவே ஆன்சைட்  கெடச்சு இங்க வந்திருக்காங்க. எப்படி காவ்யா உயிரோட இருக்காங்கன்னு கூட தெரியாது. நேத்து என்னோட ஆஃபீஸ்ல விஷயமா வெளியூர் போயிட்டு, வந்தப்போ ஏர்போர்ட்ல காவ்யா மட்டும் தனியா நடந்துட்டு, பேசிட்டு லக்கேஜ் எடுத்துட்டு போனாங்க. நான் பின்னாடியே போய், அவங்க கிட்ட பேசலான்னு நெனைக்கரப்போ, அவங்க தனக்கு தானே பேசிக்கிட்டு இருந்தாங்க. ரிஷி ரிஷின்னு  பேசிட்டு இருந்தாங்க. நான் அவங்க முன்னாடி போய் நின்னு காவ்யா, காவ்யான்னு கூப்பிட்டு பார்த்தேன். எந்த விதமான ரீயக்ஷணும்  தரல, அப்படியே மயங்கி விழுந்துட்டாங்க.  ஏதோ ப்ரொப்லெம்ன்னு  நெனச்சு, எமெர்ஜென்சிக்கு போன் செய்யலான்னு போன் எடுத்தா.
 சார்ஜ் இல்ல. சரி பூத்ல போன் பண்ண போனப்போ, ஏர் ஹோஸ்டஸ் வந்து அவங்கல எழுப்ப, எழுந்துட்டாங்க. எனக்கு ஒரே ஆச்சர்யமா இருக்க, முன்ன பின்ன பார்த்துக்கொண்டே, போன் எடுத்து போன் செய்துகிட்டே வெளில ஓடினாங்க. நானும் பின்னாடியே வர, டாக்ஸி டிரைவர் கிட்ட பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன். எனக்கு பயங்கர ஷாக்கிங்கா இருந்துச்சு. அப்பறம் தான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம் டாக்டர். குழம்பிய நிலையில் கேட்க ஆரம்பித்த டாக்டர், ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டே இருந்த ராபர்ட்டுக்கு இப்போது முகத்தில் ஒரு தெளிவு தென் பட்டது.

மிஸ்டர் ராகவ், நீங்க சொல்றத, அவங்க கூட வேல செய்யறவங்க சொல்றத வச்சு பார்க்கின்றபோது, காவ்யா இஸ் அஃபக்டெட் பை அன் டிசார்டர். இது இங்க இருக்கறவங்க பல பேர் இதால பாதிக்கப்பட்டு இருக்காங்க. இத ஸ்கிசோஃப்ரினியா(Schizophrenia ) ன்னு  சொல்லுவாங்க. அதாவது தமிழ் அர்த்தம்னா, மன பிளவுன்னு  சொல்லலாம். கொஞ்சம் புரியறமாதிரி உங்களுக்கு எக்ஸ்ப்ளைன் பண்றேன். இந்த வகையான டிசார்டர்ஸ் எல்லாமே, ஒரு இமேஜினரி உலகம் அதாவது, கற்பனையான உலகத்தில் இருப்பார்கள். பேசிக்கா ஹுமனுக்கு இருக்கற ஐந்து புலங்களில் அதாவது, பார்வை, கேட்கும் திறன், சுவை, நுகர்தல் மற்றும் தொடு உணர்ச்சி. இதுல ஏதாவதுல பாதிப்பு வரலாம். ஆனால், பொதுவாக இது ஒலி கேட்பது போன்ற மனப்பிரமைகள், திரிபுணர்வுப் பிணி (paranoid), பயங்கரமான மருட்சி (delusion) அல்லது ஒழுங்கின்மையான பேச்சு மற்றும் சிந்தனை இவற்றுடன் குறிப்பிடும்படியான சமூக மற்றும் பணி நிமித்தமான செயல்திறன் திரிதல் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது. இந்த பிரச்சனை  பற்றி டெஸ்ட் எல்லாம் எதுவும் கெடயாது. நோயாளியே தமது அனுபவங்களைக் கூறுவதையும், மற்றவர்கள் அவரிடம் காணப்பட்ட நடத்தையாகக் குறிப்பிடுவதையும் அடிப்படையாகக் கொள்கிறது. இது கொஞ்சம் காம்ப்ளிகேட்ட் கேஸ். இந்த விதமான நோய்க்கு ட்ரீட்மென்ட் கொஞ்சம் கம்மி. இதுல நெறைய சப்-டைப் இருக்கு. அதுல ஒரு பிரிவுதான் இது.  ரிஷின்ற ஒரு கேரக்டர் அவங்க லைஃப்ல இருந்திருக்காது. முழுக்க முழுக்க கற்பனையில் உருவானதுதான். தனிமை, விரக்தி, அனாதை ஆனா உணர்வு, எல்லாம் சேர்ந்து, அவங்கள, அவங்களே தேர்த்த முயற்சி செய்ததன் பலன் தான் ரிஷி. அவங்களா ஒரு கற்பனை உருவத்தை உருவாக்கி அதனோடு வாழ்ந்திருக்கிறார்.  நேற்று வரைக்கும் அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு ப்ராப்லெம் இருக்கறதே தெரியாது. ஆனா, இன்னிக்கு அல்லது அவங்களுக்கு எப்போ ஞாபகம் வருதோ, அன்னிக்கு ரெண்டு விஷயம் நடக்கலாம்.

அவங்களுக்கு ரிஷின்ற ஒரு கேரக்டர் மட்டுமே எஞ்சி இருக்கும். அல்லது
அவங்களுக்கு மற்ற எல்லா விஷயமும் இன்க்ளுடிங் அவங்க பழைய சம்பவங்கள் ஞாபகம் வரலாம்.

இதுல எது நடந்தாலும் அவங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. ரிஷி இல்லாத ஒரு உலகத்தை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க இயலாது. ஏன் தற்கொலைக்கு கூட முயற்சி எடுக்கலாம்.
சோ, நீங்க ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். லெட் அஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட். சொல்லி விட்டு, ராபர்ட் கிளம்பினார்.

ராகவ் மெதுவாக எழுந்து, எமெர்ஜென்சி வார்டை நோக்கி நடந்தான் ஒரு தீர்மானத்தோடு.  காவ்யாவின் அருகில், கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருக்க, அவளின் பின்னாடி இருந்த திரையில் கோடு மேலும் கீழுமாய் நகர்ந்து கொண்டிருந்தது.


*******************முற்றும்********************

,.

No comments:

Post a Comment